Janu / 2024 மார்ச் 14 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி , மாங்காடு பகுதியில் பாரிய விபத்து ஒன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று, வீதியருகில் இரும்பு தளபாடங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்ட ரக வானத்துடன் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவ்விபத்துச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில், ஐவர் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் அருலிருந்த பேருந்து தரிப்பிடம் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதாகவும், தெரியவந்துள்ளது .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
வ.சக்தி


11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago