Janu / 2024 மார்ச் 05 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன் வெளிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .
மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த சிறிய ரக லொரி வாகனமொன்று , பிரதான வீதியை கடக்க முயன்ற வயோதிபர் ஒருவர் மீது மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதுடன் குறித்த முதியவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இதன் போது வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கும் , எரிவாயு சிலிண்டர் வாகனமொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
மேலும் அதிக வேகம் காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
வ.சக்தி


7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025