Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வாவியின் , பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (19) மாலை துவிச்சக்கரவண்டி ஒன்றும் காலணியும் கிடப்பதாக அப்பகுதியில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது .
பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யோகநாதன் கிதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இஸ்த்தலத்திற்கு விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வி.ஆர்.மகேந்திரன் சடலத்தைப் பார்வையிட்டதுடன் சடலம் , பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
மேலும் இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வ.சக்தி
34 minute ago
43 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
57 minute ago
1 hours ago