Janu / 2024 ஒக்டோபர் 07 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு நகரில் , பெண்களினால் அமைதி பேரணியொன்று திங்கட்கிழமை (07) காலை முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான குறித்த பேரணி பார் வீதி,திருமலை வீதியூடாக சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது.
சமூக செயற்பாட்டாளர்களான தட்சனா மூர்த்தி சாரதாதேவி, அனீஸா பிர்தௌஸ் உட்பட பலரும் இதில் கலந்துக்கொண்டதுடன“ பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரீ.எல்.ஜவ்பர்கான்



21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025