2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாலியல் சேஷ்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்

Freelancer   / 2023 செப்டெம்பர் 17 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 வயதுடைய மகளை பாலியல் சேஷ்டை புரிந்த 58 வயதுடைய தந்தையை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டிருந்தார்.

குறித்த சிறுமியின் மீது தந்தை பாலியல் சேஷ்டை புரிந்துள்ளதாக தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் வெள்ளிக்கிழமை(15) குறித்த நபரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 58 வயதுடையவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் புதன்க்கிழமை 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .