ரீ.எல்.ஜவ்பர்கான் / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குட்பட்ட காத்தான்குடிப் பொதுச்சந்தை, பொதுச்சுகாதார பரிசோதகர்களால் நேற்று (04) திடீரென சுற்றிவளைப்புக்கு உட்படுத்தபட்டு, பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் யு.எல்.நஸீர்தீனின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றி வளைப்பின்போது, மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த, காலாவதியான பெருமளவு மரக்கறிகளும் பழவகைகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், அடைக்கப்பட்ட பானங்கள், பொதிசெய்யப்பட்ட பொருட்களும், இவ்வாறு கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. குறித்த வர்த்தகர்களுக்கு, சுகாதார அதிகாரிகளால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025