2025 மே 01, வியாழக்கிழமை

பாவனைக்குதவாத மரக்கறிகள் விற்பனை; சுகாதார பரிசோதகர்கள் முற்றுகை

Princiya Dixci   / 2021 மார்ச் 02 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல், டெங்குத் தாக்கம் ஆகியவற்றுடன் போராடிவரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடவேண்டிய நிலையை காணமுடிகின்றது.

பாவனைக்குதவாத மரக்கறிகளை விற்பனை செய்த மட்டக்களப்பு நகர், பன்சல வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையமொன்று, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்று (02)  முற்றுகையிடப்பட்டது.  

மட்டக்களப்பு மாவட்ட மாகாண மேற்பார்வை பரிசோதகர் கே.ஜெயரஞ்சன் தலைமையில், கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் இந்த முற்றுகையை மேற்கொண்டனர்.

மேற்படி மரக்கறி விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலை மிக மோசமான நிலையில் இருந்ததுடன், அதனுள் அழுகிய நிலையில் பெருமளவான மரக்கறிகள் மீட்கப்பட்டன.

அத்துடன், வர்த்தக நிலையங்களில் முன்பாகவும் பாவனைக்குதவாத நிலையில் மரக்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து 220 கிலோகிராமுக்கும் அதிகமான பாவனைக்குதவாத மரக்கறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .