Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
ஏறாவூர், முகாந்திரம் வீதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாய், மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேகநபர்களில் ஒருவர், இவ்வருடம் பெப்ரவரியில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (25) கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளாரென, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை, ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷாத் (வயது 29) என்பவரே, முதுகுப்புறத்தில் மூன்று தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூரில், வைத்தே கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், கத்திக்குத்தை மேற்கொண்டு விட்டுத் தலைமறைவானதாகவும் ஏறாவூர்ப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025