Princiya Dixci / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
இரட்டைப் படுகொலை வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ரீஎம்விபி) முன்னாள் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்தன் மீதான வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில், இணையவழியூடாக நேற்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்திலேயே பூ.பிரசாந்தனை, இம்மாதம் 15ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆரையம்பதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய, 2020 நவம்பர் மாதம் 23ஆம் திகதி பிரசாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026