Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூன் 09 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜித் மதுராவல
மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்தி நிறைவு செய்வதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவையில் விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தல், வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது ஏற்படுகின்ற இடையூறுகளை கையாள்வதற்கான பொறி முறைமைகள் போன்றன தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதமரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் ஆகியோர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது, அமைச்சரவை பத்திரம். மற்றும் விசேட நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்ததோடு. இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நூலகத்தின் பணிகளை முழுமையாக முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஏனைய அனைத்து விடையங்கள் தொடர்பிலுமான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி சிவலிங்கம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட கட்டிட திணைக்கள உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
11 minute ago
26 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
41 minute ago
59 minute ago