பேரின்பராஜா சபேஷ் / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி மற்றும் தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இன்றி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணையுமாறு ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளர் ஐ.அப்துல் வாசித் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டு கடமைப்பொறுப்பேற்கும் நிகழ்வில் இன்று (09) இடம் பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அங்கு புதிய தவிசாளர் மேலும் பேசுகையில்,
சத்தியம் வெற்றி பெற்றுள்ளது. அசத்தியம் அழிந்துள்ளது. அந்தவகையில் ஏமாற்று அரசியலை அடியோடு ஒழிப்போம். எமது ஆட்சிக்கு தமிழ்ச் சகோதரர்கள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் எமது ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் இரு கண்களைப்போன்று நேசிக்வேண்டிய பொறுப்பும் எனக்கு இருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
எனவே இந்தச் சபையில் ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி, தமிழ் , முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இன்றி எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago