2025 மே 01, வியாழக்கிழமை

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவைர்கள் நியமனம்

Princiya Dixci   / 2021 மார்ச் 02 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்வதற்கென பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கென மக்கள் பிரதிநிதிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தெரிவித்தார். 

இதனடிப்படையில், ஏறாவூர்ப் பற்று, மண்முனைப்பற்று, போரதீவுப்பற்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுகளுக்காக இரஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, கிரான் வவுணதீவு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் நகர் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர்ப் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்எருவில்பற்று, போரதீவு பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு உபதலைவராக பரமேஸ்வரம் சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .