2025 மே 08, வியாழக்கிழமை

பிரதேச செயலகத்தில் பொலிதீன் பாவனைக்குத் தடை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி பிரதேச செயலகத்தில், இன்று (01) முதல் பொலிதீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.    

காத்தான்குடி பிரதேச செயலகத்துக்குள்ளும் பிரதேச செயலக வளாகத்துக்குள்ளும் பொலிதீன் பாவனையைத் தடை செய்யும் முகமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், போத்தலில் அடைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்துவது, பக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவது, ஐஸ்கீம், யோகட் கப் போன்றவைகளைத் தடை செய்யும் முகமாக முதல் கட்டமாக பொலிதீனை தமது அலுவலகத்துக்குள்ளும் அலுவலக வளாகத்திலும் தடை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, பாரம்பரிய உணவுகளை தமது அலுவலக வைபவங்களில் பயன்படுத்துவதெனத் தீர்மானித்துள்ளதாகவும் அலுவலகத்துக்குள் பொதுவான நீர்த்தாங்கியை வைத்து அதிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அவர்களது தனிப்பட்ட நிகழ்வுகளின் போதும் குடும்ப நிகழ்வுகளின் போதும் இவற்றைக் கடைப்பிடிக்கும் போது, சிறந்த சூழலுக்கு ஏற்ற நோயற்ற வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X