2025 மே 22, வியாழக்கிழமை

‘பிரபாகரனுக்கு நினைவுத் தூபி’: பொது பலவை வரவேற்றது தமிழரசு

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும்” என, பொதுபல சேன அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கூறியுள்ளார், அதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வரவேற்றுள்ளது.  

“இது, துட்டகைமுனு மன்னன் அன்று கையாண்ட விடயம் என்பதை நினைவூட்ட

விரும்புகிறோம்” என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27ஆவது ஆண்டு நினைவேந்தல், புதன்கிழமை (20) மாலை, உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  

அவர் தொடரந்து உரையாற்றுகையில், “எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் வீரத்துக்குத் தலைவணங்கி, அவருக்குத் தூபி அமைத்து வணக்கம் செலுத்த வேண்டும். அந்த இடத்தில் ஓசையிடாமல் செல்ல வேண்டும் என்று எல்லாம் கட்டளையிட்டு, 2,200 ஆண்டுகளுக்கு முன்பு துட்டகைமுனு மன்னன் சரித்திரத்தில் பதித்த இந்த விடயத்தை, இந்த நாட்டு அரசாங்கம் ஏன் தற்போது பதிக்க முடியாது?  கொண்டிருக்கின்றோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .