Princiya Dixci / 2021 ஜனவரி 06 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் இயங்கி வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் நிமித்தம், மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய நிலையத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர், இதற்கு முன்னர் கல்முனை பிராந்திய இணைப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
இதேவேளை, முன்னதாக மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றிய ஏ.சி. அப்துல் அஸீஸ் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளார்.
9 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago