2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புகையிரதத்தில் மீட்கப்பட்ட மர்மப் பை

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் நேற்று (19) மாலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட நிலையில் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையை மீட்டு, புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர். 

பையைத் திறந்து பரிசோதித்தபோது, அதில் 252 பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

விரைந்து செயல்பட்ட பொலிஸார், பையை மீட்டு, அதிலிருந்த போதைப் பொருளை கைப்பற்றினர்.

இந்தப் போதைப்பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X