Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுமானால், அது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரியவருவதாக கூறிய முன்னாள் முதலமைச்சர், உயர்நீதிமன்றம், சட்டமாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோர்களிடம் ஜனாதிபதி யோசனைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய முறைமையில் தான் தேர்தல் நடைபெறுமெனவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் கவனமாகச் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டய முன்னாள் முதலமைச்சர், கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் மூலமாகக் கிடைக்கப் பெற்ற பெறுபேறுகளை சிறுபான்மைக் கட்சிகள் தெளிவுபட அறிந்து, அவற்றின் சாதக, பாதகங்களை விளக்கி மாகாண சபைகளுக்கான தேர்தலைப் பழைய முறைமையின் கீழ் நடத்த வேண்டும் எனக் கோரியிருந்த போதும், அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, வந்த நிலையிலும் திடீரெனப் புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதென எடுக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கதல்ல. ஒருவேளை, இது நடக்குமானால் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய தேர்தல் முறைமைக்கான பிரேரணைக்கு ஆதரவாக ஆட்சியைக் காப்பாற்றுகின்றோம் என்ற கோதாவில் கைதூக்கியவர்கள் அனைவரும் இதற்குப் பொறுப்புக்கூறவேண்டும்.
இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் அவ்வப்போது உதாசீனம் செய்யப்பட்டுவரும் நிலையில், அவர்களது பிரதிநிதித்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இந்த விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago