Princiya Dixci / 2021 மே 09 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
திரிவடைந்த கொரோனா மூன்றாம் அலையின் பின்னர் நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்துவருவதுடன், நாளாந்தம் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதமும் நாட்டிலே அதிகரித்தவண்ணமே உள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட கொவிட் 19 செயலணியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக பல்வேறுபட்ட நடவடிக்கைகள் பொலிஸார், சுகாதார பிரிவினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் சுதத் மாசிங்க தலைமையில், மட்டக்களப்பு நகர் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை, இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் இவ்விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இதன்போது வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .