Princiya Dixci / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம் கீத், ரீ.எல்.ஜவ்பர்கான்
திருகோணமலை மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 60 பேருக்கு, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சையொழிபவன் தலைமையில், திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (10) கொவிட்19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.
புல்மோட்டை, குச்சவெளி, நிலாவெளி, உப்புவெளி, பதவிசிறிபுர மற்றும் தலைமையகப் பொலிஸ் நிலையங்களில் கடைமையாற்றும் பொலிஸாருக்கே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேற்படி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு சுகாதார வைத்தியர் அதிகாரி அலுவலகத்தில் நேற்று (09) ஆரம்பித்து வைக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago