2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரை தாக்கியவர் கைக்குண்டுடன் கைது

Freelancer   / 2023 மார்ச் 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதலை  நடத்தி தப்பிச் சென்றவர் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
 
சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாரின் 119 அவசரசேவை பிரிவுக்கு  தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக ஆரையம்பதி கிழக்கு பிரதேசத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதனையடுத்து, இரு பொலிஸார் வாகனத்தில் விசாரணைக்காக அந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு இருந்த வீட்டின் உரிமையாளரான மனைவியை தாக்கியநபர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த இரு பொலிஸாரும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கிருந்து ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடிய நபரை ஞாயிறு இரவு கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X