2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவதற்கான கூட்டம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  போதைப்பொருள் கட்டுப்பாட்டு அபிவிருத்தி  உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான மீளாய்வுக்கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (05) இடம்பெற்றது.

மாவட்டத்தில்  உள்ள 14 பிரதேச  செயலகங்களில்  கடமையாற்றும்  போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுகளால் மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகள் மற்றும் கடமைகள்  தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

போதைப்பொருள் பாவனையின்  தாக்கத்தை எமது பிரதேசங்களில் குறைப்பதற்கும் அதிலிருந்து இளைய சமுதாயம் மற்றும் பொதுமக்களை  பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை முன்னெடுப்பது  மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படவேண்டும்  என்பது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு  மாவட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு இணைப்பாளர் ப.தினேஷ்  மற்றும்  மாவட்ட  உளவளவாளர் ஜனார்தனி நரசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .