2025 மே 01, வியாழக்கிழமை

போதைப்பொருள் தடுப்பு செயலணி உருவாக்கம்

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், போதைப்பொருள் தடுப்புச் செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு அமைச்சும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையும் இணைந்து, “போதைப்பொருள் அற்ற சமூகம் - சௌபாக்கியமான தேசம்”எனும் தொனிப்பொருளில், நாடளாவிய ரீதியில், பல்வேறு போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன.

இதன்ஒரு கட்டமாக பிரதேச செயலகங்கள் ரீதியாக போதைப்பொருள் தடுப்புச் செயலணி உருவாக்கப்பட்டு, அவற்றை இணைத்ததாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராயும் வகையிலான விசேட கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (16) நடைபெற்றது.

பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு, போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகளை முறையான வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் மாதாந்தம் அது தொடர்பில் மாவட்டச் செயலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மாவட்டச் செயலாளரால் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் ஜி.விஜயதர்சன் உட்பட பிரதேச செயலாளர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மதுவரித்திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .