Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பேரின்பராஜா சபேஷ் / 2017 ஜூலை 14 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் ஊடாக போதைப்பொருள் ஒழித்தல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதி நாடகம் என்பன, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (14) நடைபெற்றன.
ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகப் பிரிவில், தெரிவுசெய்யப்பட்ட 14 பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிழ்வுகள் நடைபெற்றுள்ளன என, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் தெரிவித்தார்.
'சிறுவர்கள், போதைப்பொருள் பாவனைக்கு விரைவில் அடிமையாகக்கூடியவர்கள், அவர்கள் தொடர்பில் விழிப்பாக இருப்போம்' எனும் தொனிப்பொருளில்,செங்கலடி நகரில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதில், செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள், சமுர்த்தி மகாசங்கம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
'புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும், குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, புகைத்தல் உங்களையும் எங்களையும் நேசிப்பவர்களையும் பாதிக்கும், குடிபோதையில் குடும்ப சந்தோசத்தை இழக்காதீர்கள், போதைப்பொருள் பாவனை சட்ட ரீதியான குற்றமாகும், போதை நாம் காசு கொடுத்து வாங்கும் வேதனை இறுதியில் மரணம், போதையை ஒழிப்போம்; பாதையை வளர்ப்போம், போதைப் பொருள் பாவனையிலிருந்து நண்பர்களைப் பாதுகாப்போம், போதையில் மோதி பாதையை மாற்றாதே, போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள், போதை போதை அது சாவின் பாதை, மேதையை அழிக்கும் போதை' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பததைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர்.
13 minute ago
15 minute ago
20 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
20 minute ago
58 minute ago