2025 மே 02, வெள்ளிக்கிழமை

போதைப் பொருள் விற்ற ​‌மூவர் கைது

Freelancer   / 2023 ஜூலை 02 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

ஹெரோய்ன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட தந்தையையும் மகனையும் கைது செய்துள்ளதுடன் மற்றொருவரை ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (1) குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றஹீம் தலைமையிலான பொலாஸ் குழுவினர் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது புதிய காத்தான்குடி பஸ் டிப்போ வீதியில் 2120 மில்லி கிராம் ஹெரோய்னுடன் தந்தையும் 40 மில்லி கிராம் ஹெரோய்னுடன் மகனும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கர்பலா பள்ளிவாயலுக்கருகில் 2960 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 35 வயது நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூவரும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் எனவும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X