Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.துசாந்தன்
மட்டக்களப்பு, பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரை தனது சேவையை மேற்கொண்டு வந்த வேர்ள்ட் விஷன் நிறுவனம், அதன் 24 வருடகால சேவைகளை முடித்துக் கொண்டு, நேற்று (09) அப்பிரதேசத்திலிருந்து வெளியேறியது.
இந்த நிறுவனத்தின் சேவைகளுக்கு மகுடம் சூட்டும் முகமாக, போரதீவுப்பற்று பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நன்றி கூறும் விழா, வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் அன்றைய தினம் நடைபெற்றது.
யுத்தம், வெள்ளம், வரட்சி மற்றும் ஏனைய இடர்களின் போதும் பின்தங்கிய மக்களின் வலதுகரமாக இருந்து கல்வி, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம், வாழ்வாதாரம், வீதி அபிவிருத்தி, மரம் நடுகை, குடிநீர்வசதி, மற்றும் உட்கட்டுமான வேலைகள் என பல மில்லியன் கணக்கான நிதிகளைச் செலவு செய்து பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வந்த, இந்தத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்காலத்தை 'போரதீவுப் பற்றின் பொற்காலம்' என, அப்பகுதி வாழ் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்போது, இந்நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மக்கள் வேவைகளை இலகு படுத்திய அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் இதன்போது ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, வேர்ள்ட் விஷனின் இலங்கைப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து மடல் மற்றும் ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
9 hours ago
23 May 2025