வடிவேல் சக்திவேல் / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலக தைப்பொங்கல் விழா, பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.
பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், ஏர்முனைக்குழு, அரிவிவெட்டுக்குழு, உப்பட்டிக்குழு, பொலிக்குழு, சூடு மித்தித்தல் குழு என, விவசாயற் சொற்களை மையப்படுத்தி, 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 5 வகையான பொங்கல், இதன்போது இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எஸ்.சோமசுந்தரம், உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள், அப்பகுதிவாழ் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய நிருவாகம், தேன்கூடு வாழ்க்கைத் திறன் விருத்திக்கான மனித்துவ மையம், ஆகிய அமைப்புக்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தன.
2 minute ago
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
19 minute ago
25 minute ago
1 hours ago