2025 மே 08, வியாழக்கிழமை

போரதீவுப்பற்று பாதீடு எதிர்ப்பின்றி நிறைவேற்றம்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி

போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்ப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக, அப்பிரதேச சபையின் தலைவர் யோகநாதன் ரஜினி தெரிவித்தார்.

அடுத்தாண்டுக்கான போரதீவுப் பிரதேச சபையின் பாதீடு, சபையில்  இன்று (03) சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதேச சபைத் தலைவர் தலைமையில் பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோ,து ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து, அச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பின்றி ஏகமனதாக பாதீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 8 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி 3, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2, சுயேட்சைக் குழுக்கள் 2, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி 1, தமிழர் விடுதலைக் கூட்டணி 1 என, மொத்தம் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X