2025 மே 21, புதன்கிழமை

போலி தேன் போத்தல்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 02 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு நகரில் போலி தேன் போத்தல்களை விற்பனை செய்ய முயன்ற ஒருவர், பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இன்று (02) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை தேன் போத்தல்களும் அவரிடம்  இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் ஊடாக இந்தத் தேன் போத்தல்கள் கொண்டுவரப்பட்டபோது, அப்பகுதியில் சுகாதார சோதனைகளில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகர்களால், இந்த போலி தேன் விற்பனை முறியடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதன்போது போலியாகத் தயாரிக்கப்பட்ட தேன் போத்தல்கள் 15 கைப்பற்றப்பட்டுள்ளனவெனவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

குறித்த தேன் போத்தல்கள், மிகவும் சூட்சுமமான முறையில் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

தேன் போத்தலில் மேற்பகுதியில் உண்மையான தேன் வைக்கப்பட்டு, கீழ் பகுதியில் சீனிப்பாகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மேலோட்டமாக பரிசோதிக்கும்போது உண்மையான தேன் என்பதையே காட்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர், விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X