Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பாடசாலைக்குச் செல்லாமல் கூலி வேலை செய்துவந்த மற்றும் அலைந்து திரிந்த 7 சிறுவர்களை மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கண்டுபிடித்துள்ளதுடன், அவர்களை பாடசாலையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரீ.மதிராஜ் தெரிவித்தார்.
சிறுவர்கள் சிலர் சித்தாண்டிப் பிரதேசத்தில் வாராந்தச் சந்தைப் பகுதியில்; சிறு தொகைப் பணத்துக்கு குப்பை அகற்றும் தொழில் செய்வதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, தேடுதல் மேற்கொண்டபோதே பாடசாலைக்குச் செல்லாத இச்சிறுவர்களை கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், இச்சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தியோருக்கும் இச்சிறுவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago