Suganthini Ratnam / 2016 மே 29 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கையில் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 15 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் கே.குலதீபன் தெரிவித்தார்.
இந்த உதவி திட்டத்தின் கூடுதலான பங்களிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சிறுகைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தி மாகாணத்தின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனங்கள் இணைந்து கிழக்கு மாகாண வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினை உருவாக்கியுள்ளன.
இலங்கை அனர்த்த முகாமைத்துவ ஆசிய பசுபிக் அலையின்ஸின் (ஏ-பட் ஸ்ரீலங்கா) பங்களிப்புடன் இந்த இணைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் மேம்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்துறையினை மேம்படுத்துவதுடன் பெண்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்வடைய செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதலாவது கூட்டம் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் உள்ள மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் கே.அகிலன் மற்றும் திருகோணமலை மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் கே.குலதீபன் உட்பட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கடந்த காலத்தில் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனங்கள் சிறந்த முறையில் செயற்படமுடியாத நிலையில் இருந்ததாகவும் புதிய ஆட்சியில் தமது செயற்பாடுகளை சிறந்தமுறையில் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

8 minute ago
24 minute ago
27 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
27 minute ago
47 minute ago