2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிதாகக் கட்டப்பட்ட வீடு இனந்தெரியாதோரால் தீக்கிரை

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

புதிதாக கட்டப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடு இனந்தெரியாதோரால் இன்று திங்கட்கிழமை(05) அதிகாலை 02.00 மணியளவில் தீவைக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலளர் பிரிவைச் சேர்ந்த செம்மண்ஓடை பகுதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  

புதிதாகக் கட்டப்பட்ட வீடு தீப்பற்றியெரிவதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் படையினரினது உதவியுடனும் பொதுமக்களினது உதவியுடனும் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X