Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
போதையற்ற சிறந்த சமுதாயத்தைத் தோற்றுவிக்கும் முகமாக மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவை போதையற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட் தெரிவித்தார்.
இது சம்பந்தமான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் ஏறாவூர் நகர பிரதேசத்துக்கான போதைப் பாவினை ஒழிப்புப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'செப்டெம்பர் மாதம் முழுவதையும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் போதை ஒழிப்பின் தீவிர காலப்பகுதியாக விசேட கவனம் எடுத்தல், பிரதி வெள்ளிக்கிழமையும் வரும் ஜும்மா தொழுகைப் பிரசங்கத்தை 'போதைப்பொருள் ஒழிப்பு' பற்றிய தொனிப்பொருளில் நடத்துதல், போதை ஒழிப்பு துண்டுப்பிரசுரங்களையும் பதாதைகளையும் தொடர்ச்சியாக வெளியிடல், பாடசாலைக் காலைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக போதை ஒழிப்பு விழிப்புணர்வுளை வழங்குதல், போதை ஒழிப்புக்காக மாணவர்கள் மத்தியில் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தல், முக நூல்களின் ஊடாக பிரசாரம் செய்தல், போதை ஒழிப்பில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago