Suganthini Ratnam / 2017 ஜனவரி 24 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
எந்தவொரு விடயமாகிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதில் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கான ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு 'சுத்தமான நகரம்' எனும் தொனிப்பொருளின் கீழ் சுற்றாடலைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக மட்ட நிறுவனங்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பனவும் 'சுத்தமான நகரம்' எனும் செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பிப்பதிலும் மற்றெல்லா மூலங்களையும் விட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
எனவே டெங்கு ஒழிப்பு, சுற்றாடலைப் பேணுதல், பசுமையான சூழல், இயற்கையைப் பாதுகாத்தல், போதைப்பொருள் விழிப்புணர்வு, சமூகவிரோதச் செயல்களை ஒழித்தல், சட்டத்தையும் நீதியையும் கடைப்பிடிக்கும் அறிவை மக்களுக்கு ஊட்டுதல், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஊடகங்கள் சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொது நிகழ்வுகளிலும் கருத்தரங்குகளிலும் ஊடகவியலாளர்களையும் விழிப்புணர்வூட்டும் அணியில் இணைத்துக்கொள்ளத் தவறக் கூடாது.
அவ்வாறு செய்தால் அதிகாரிகள் வழங்கும் தகவல்களை மிக இலகுவாக பொதுமக்களிடம் சேர்ப்பிக்க வழியேற்படும்' என்றார்.
8 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
45 minute ago