2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பொதுமக்களின் மயானக் காணி ஆக்கிரமிப்பு?

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

“ஐம்பது வருட காலம் நாம் பயன்படுத்தி வந்த எமது மயானக் காணி, தற்போது எப்படி வனவள பரிபாலனத் திணைக்களத்துக்குச் சொந்தமாகும்?" என, தம்பலகாமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தின் மாதர் சங்கத் தலைவி சத்தியசிலன் கௌரி, கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து நேற்று, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“எமது கிராமத்தினரால் இந்தப் பொது மயானமானது, 1964ஆம் ஆண்டு முதல்  பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இக்காணியை, வனவள பரிபாலனத் திணைக்களம், தமது காணி என எல்லைக் கல் போட்டுள்ளது.

"நாம், 50 வருடங்களுக்கு அதிகமான காலத்தில் எமது மூதாதைகளை நல்லடக்கம் செய்து வந்த காணியை விட்டு, வேறு ஓர் இடத்தை மயானத்துக்காக அடையாளம் காட்டுமாறு,  பிரதேச செயலகமும் கோருகின்றது.

"வேறு ஒரு காணியை  காட்டுவதென்றால், அதுவும் வனவள பரிபாலன எல்லைக்குள் உள்ள காடுகளாகவே காணப்படுகின்றன. எனவே, இச்செயலானது எம்மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

"எனவே,  நாம் 50 வருடங்களாக பயன்படுத்தி வந்த  அக்காணியை, எமக்கு பெற்றுத்தர, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  அவர்  கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .