2025 மே 10, சனிக்கிழமை

புதிய செயலாளர்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

கிழக்கு இலங்கை இந்து குருமார் பேரவையில் நீண்டகாலமாக நிலவிய செயலாளர் பதவிக்கான  வெற்றிடத்துக்கு சிவஸ்ரீ பாலச்சந்திரன் குருக்கள் சபையோரினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதாக அப்பேரவையின் ஊடகப் பேச்சாளர் சிவ ஸ்ரீ சண்முகநாதன் குருக்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வீரகத்திப் பிள்ளையார் கோவில் முன்றலில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தின்போதே, இவர் தெரிவுசெய்யப்பட்டார்.  

இக்கூட்டத்தில் குருமார்களின் பிள்ளைகளினுடைய எதிர்கால கல்வி நடவடிக்கையை கருத்திற்கொண்டு பிரத்தியேகமாக வேதாகம பாடசாலையை நிறுவுவதற்கு குருமார்களின் நிதியுதவியுடன் காணி கொள்வனவு செய்து அரசு நன்கொடை மூலம் கட்டடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளல், மாணவர்களின் அறநெறியை வளர்க்கப் பாடுபடுதல், இந்துசமய வழிபாட்டுக்கும் சமய வளர்சிக்கும் உந்து சக்தியாக செயற்படுதல் போன்ற தீர்மானங்களும்; நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X