Princiya Dixci / 2016 மே 05 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊழியர் சேமலாப நிதியினை கிழக்கு மாகாணத்திலுள்ளவர்கள் விரைவாகப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு திருகோணமலையில் பிரதித் தொழில் ஆணையாளர் அலுவகமொன்று, எதிர்வரும் திங்கட்கிழமை (09) தொழில் ஆணையாளரினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணப் பிரதித் தொழில் ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான கே.எல்.சுபைர் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியின் கிழக்கு மாகாண அங்கத்தவர்கள், ஊழியர் சேமாப நிதியில் நூற்றுக்கு முப்பது சதவீதத்தினை கடந்த காலங்களில் கொழும்பிலுள்ள அதன் அலுவலகத்தில் பெற்று வந்தனர்.
இந்நிலையில், பிரதித் தொழில் ஆணையாளர் அலுவலகம் கிழக்கு மாகாணத்துக்கென திருகோணமலையில் திறந்து வைப்பதன் மூலம் இனிவரும் காலங்களில் ஊழியர் சேமலாப நிதியின் கிழக்கு மாகாண அங்கத்தவர்கள், ஊழியர் சேமாப நிதியில் நூற்றுக்கு முப்பது சதவீதத்தினை திருகோணமலை அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளமுடியுமென கிழக்கு மாகாணப் பிரதித் தொழில் ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான கே.எல்.சுபைர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago