2025 மே 09, வெள்ளிக்கிழமை

பிரதான வீதிகளில் வேகத்தடை வீதிக் கோடு

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பிரதான வீதிகளில் யூ வளைவுள்ள இடங்களை வாகன சாரதிகள் முன்கூட்டியே அறிந்து வாகனங்களில் வேகத்தை குறைத்து அவதானமாக செலுத்தும்படி வேண்டி வேகத்தடை வீதிக் கோடுபோடும் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை நாவற்குடா,கல்லடி ,நொச்சிமுனை ,மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதான வீதிகளில் அமைந்துள்ள யூ வளைவுள்ள இடங்களுக்கு அருகாமையில் மேற்படி வேகத்தடை வீதிக் கோடு போடும் பணிகள் தற்போது துரித கெதியில் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யூ வளைவுள்ள இடங்களில் வாகனங்களை வேகமாக செலுத்தி மாறும்போது விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X