2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போரதீவுப்பற்று கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள்

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களின் நன்மை கருதி பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பாற்பொருட்களை உற்பத்தி செய்தல், நல்லினக் காளை மாடுகளை வளர்த்தல், சினைப்படுத்தல் போன்ற பல திட்டங்கள் தம்மிடம் உள்ளதாகவும் இந்த நன்மைகளை பண்ணையாளர்கள் பெற்றுப் பயனடைய வேண்டும் என போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடை வைத்தியர் சி.ருசியந்தன் தெரிவித்தார்.  

போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடைப் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்றது.

மாடுகளுக்குத் தீனியாக புற்கள், வைக்கோல் போன்றவற்றை தினமும் வழங்குவது போன்று கல்சியம் தூள், சத்து மருந்துகளையும்  பண்ணையாளர்கள் உரிய காலத்துக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.  

இப்பிரதேசத்தில் குறைந்த விலையில் வெளியாட்களுக்கு கால்நடைகள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை பண்ணையாளர் சங்கம், உலக தரிச நிறுவனத்துடன் இணைந்து கால்நடைகளை விற்பனை செய்வதற்காக சந்தை வசதியை மிக விரைவில் ஏற்படுத்தவுள்ளது. இந்தச் சந்தை வசதியால் இங்குள்ள பண்ணையாளர்கள் நன்மை அடைய முடியும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X