2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெரும்போகச் செய்கைக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம்; 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (14) நடைபெற்றபோதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

கோறளைப்பற்று வடக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டுமுறிவு, மதுரங்கேணி, கிரிமிச்சை மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், 19ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வாகரை பிரதேச செயலகத்திலும் கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி, புணானை, தரவை, வடமுனை மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு கிரானிலுள்ள றெஜி கலாசார மண்டபத்திலும் நடைபெறும்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட உன்னிச்சை மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், 20ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்திலும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம், கித்துள்வெள, வெலிக்காகண்டி மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு அப்பிரதேச செயலகத்திலும் நடைபெறும்.

போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நவகிரி, தும்பங்கேணி மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், 22ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அப்பிரதேச செயலகத்திலும் மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல் மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 அத்துடன், இக்கூட்டத்தில்; விதைநெல் விநியோகம், மானிய உர விநியோகம், நீர்ப்பாசனம், வங்கிக் கடன் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது விவசாயத் திணைக்களம் மத்தி மற்றும் மாகாணம், நீர்ப்பாசனத் திணைக்களம், புவிச்சரிதவியல்  திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், தேசிய உரச் செயலகம், விதைநெல் தரநிர்ணய சபை, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், தென்னை பயிர்ச்செய்கை, பனை அபிவிருத்திச்சபை, விவசாய கமநல காப்புறுதிச்சபை, வனவளத் திணைக்களம், சமுர்த்தி, மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், நிரக இனங்கள் அபிவிருத்தி அதிகார சபை, கடற்தொழில் நீரியல்வளங்கள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்கள் உள்ளிட்டவைகளின் கடந்த காலச் செயற்பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X