Suganthini Ratnam / 2016 மே 16 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளிக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 28 வீடுகள் பயனாளிகளிடம் இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.
வீ எபெக்ற்' நிறுவனத்தின் உதவியுடன் ஒவ்வொரு வீடும் ஏழு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் வரவேற்பு அறை, சமையல் அறை, இரண்டு அறைகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஏழு கிராமங்களில் இந்த வீடமைப்புத் திட்டத்தினூடாக 192 வீடுகளை கட்டி பயனாளிகளிடம் கையளித்துள்ளதாக சுவீடன் கூட்டுறவு நிலையம் என்று அறியப்பட்ட 'வீ எபெக்ற்' நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுபாஷி திஸாநாயக்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசிப்பதற்கு வீட்டைக் கட்டிக்கொடுப்பதில் சுவீடன் மக்கள் தாராளத் தன்மையுடன் உதவியுள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.
'வீ எபெக்ற்' நிறுவனத்தின் ஐந்தாவது வீடமைப்புத் திட்டத்தில் இந்தக் கிராமம் தெரிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வகையான திட்டத்தின் கடைசி வருடம் இது எனவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago