2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம்

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அதிபர்கள், தரம் 05 இற்காக கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் விழிப்புணர்வு செயற்பாட்டில் 2013 ஆண்டு தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் தரம் 05 புலைமப் பரிசில் பரீட்சையின் புள்ளிப் பகுப்பாய்வு முன்வைக்கப்பட்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமயோசிதக் கல்வி நடவடிக்கைகள் தெளிவுபடுத்தப்பட்டன. 
 
இதன்போது தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக ஒரு தொகுதி மாதிரி வினாத்தாள்கள் எஸ்.எம். இராமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆரம்பக் கல்வி துரித அபிவிருத்தித் திட்டத்தின் செயற்பாடுகளுக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X