2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் (வயது 46) இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனது வீட்டுக்கு இன்றையதினம் காலை 6.30 மணிக்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை கைதுசெய்து சென்றுள்ளதாக அவரது மனைவியான கயல்விழி, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X