Suganthini Ratnam / 2016 ஜூன் 01 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்
பொலித்தீன் பாவனையால் மனிதனுக்கு கேடு ஏற்படுவதாகவும் எனவே, பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி விழிப்புணர்வுப் பேரணியும் வீதி நாடகமும் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றன.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் சூழல் படை அணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியானது அப்பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி, மீண்டும் அப்பாடசாலையைச் சென்றடைந்தது.
நாடகத்தின்போது, பொலித்தீன் பாவனையால் ஏற்படும் தீங்கு தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டப்பட்டதுடன், மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
மேலும், 'நாம் பிறந்த தினத்தில் ஒரு மரத்தை சுற்றுச்சூழலில் நடுவோம்', 'நிழல் தரும் மரங்களை பாதுகாப்போம்', 'பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழிப்போம்', 'சூழலில் நுளம்புகள் பரவாதவாறு சுத்தமாக வைத்திருப்போம்', 'நீர்நிலைகளை அசுத்தமாகாது பாதுகாப்போம்' என்பன தொடர்பில் இந்தப் பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.

8 minute ago
24 minute ago
27 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
27 minute ago
47 minute ago