Gavitha / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
தொப்பிகல வடமுனை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட பாலை மரங்களை கடத்துவதற்கு முயற்சி செய்த இரண்டு சந்தே நபர்களை, இன்று சனிக்கிழமை (15) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தொப்பிகல வடமுனை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட வன உத்தியோகத்தர், மரங்களையும் அதனை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
பதினாறு அடியைக்கொண்ட பதினெட்டு பாலை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாவும் மரங்களின் பெறுமதி மூன்று லட்சம் ரூபாய் என்றும் வாழைச்சேனை வட்டார வன காரியாலய மேலதிக வட்டார வன அதிகாரி எப்.எம்.சிபான் தெரிவித்தார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago