2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாவனைக்குதவாத பழங்கள், இனிப்புப் பண்டங்களை விற்ற 4 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 மே 26 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் பாவனைக்கு உதவாத பழங்கள் மற்றும் சொக்லட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் நான்கு கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்திலுள்ள 06 பழக்கடைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று வியாழக்கிழமை நடத்திய திடீர்ச் சோதனையின்போது, பாவனைக்கு உதவாத பழங்களும் சொக்லட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களும்; கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, பழுதடைந்த 15 கிலோ பப்பாசிப்பழங்களும் இரண்டு கிலோ அப்பிள் பழங்களும் மூன்று கிலோ மாம்பழங்களும் இரண்டு கிலோ 700 கிராம் விளாம்பழங்களும் 100 கிராம் நிறையுடைய 52 சொக்லட் பக்கெட்டுகளும் லேபல் இடப்படாத டொபி பக்கெட்டுகளும் உட்பட ஏனைய இனிப்புப் பண்டங்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

கைப்பற்றப்பட்ட சொக்லட் பக்கெட்டுகள் உட்பட ஏனைய இனிப்புப் பண்டங்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்களை அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X