Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று கட்டடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
2013ஆம் ஆண்டு அப்போதைய மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.எஸ்.சுபைரின் 90 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த மகப்பேற்று விடுதி நிர்மாண வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு, மேலும் 30 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முழுமை பெற்றதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கே.முருகானந்தன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உட்பட இன்னும் பல சுகாதாரத்துறை அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago