Gavitha / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
எமது அரசியல் விடயங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் உறக்கநிலை, சோம்பல் என்பன நீக்கப்பட வேண்டும். எங்களுடைய பொருளாதார அபிவிருத்தியை எமக்கான அரசியலே தீர்மானிக்கின்றது. கடந்த மாகாணசபை தேர்தலில் வெறும் ஆறாயிரம் வாக்குகளால் கிழக்கு மாகாண ஆட்சியைப் பிடிக்கத்தவிறிவிட்டோம். மக்கள் உணர்ந்து வாக்களித்திருந்தால் ஆட்சி எங்களுக்குக் கிடைத்திருக்கும். இந்நிலையில், எமது பொருளாதார அபிவிருத்தி முயற்சியைச் செய்ய முடிகின்றது என, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் விஷேட நிதியின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான நிதிக்கான கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்கொண்டு உரையாற்றுகையில், ' எல்லோரும் அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்லர். எங்களுடைய பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைள், மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் என்பனவற்றை எல்லாமேயே இந்த அரசியல் தீர்மானிக்கின்றது.
மக்களின் சோம்பல்த் தன்மையுடன் வாக்களிப்பதனால் எமக்கு இழப்பு ஏற்படுகின்றது. மக்கள் எமது கொள்கைகளை மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான வாய்ப்பினை எமக்களிக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆளும் தரப்பாக இருந்தமைக்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. நாடாளுமன்றத்தினூடாக நாம் ஆளும் தரப்பாகயிருப்பதற்கு வாய்ப்பில்லை. மாறாக பிரதேச மக்கள், நகரசபைகளில் அதற்கான வாய்ப்புக்கள் உண்டு அதனை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது எம்மவர்களே.
மாகாணசபையைப் பொறுத்தவரை அதன் செயற்றிட்டத்தில் கொள்கைள் சார்ந்த முடிவுகளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் தீர்மானங்களை எடுக்குஞ் சந்தர்ப்பம் ஆட்சியில் இணைந்துள்ளமையால் கிடைத்திருக்கிறது அதன்மூலம் முடிந்தவற்றை செய்து வருகின்றோம். ஆனாலும், மாகாணசபைக்கு நிதியை மத்தியரசே வழங்குகிறது. சுயமாகப்பெறும் அதிகாரங்களில்லை. அதனால்தான் ஒருபுறம் அரசியல் அதிகாரங்களைப் பெற்று, நாம் அபிவிருத்தியடையச் செயற்பட்டுவரும் அதேவேளை மறுபுறத்தில் அபிவிருத்தி முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றோம். மத்தியரசே எமக்கான நிதியினை வழங்குகின்றது. தற்போதைய நிலையில் திரைசேரியில் பணப்பற்றாக்குறை நிலவுகின்றது. மாறாகப் பொருத்தமில்லாத விமர்சனங்களைச் செய்வதால் எவ்விதப் பயனுமில்லை. எதிர்காலத் தமிழ் மக்களின் நிலைமைகளைப் புரிந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago