2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

மங்களகம கிராம வீட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணவிரு சேவா வீட்டு வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட மங்களகமவில், பெரும்பான்மையின மக்களுக்கான 50 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்துக்கு, இன்று (21) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

ரணவிரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட அலுவலர் ரீ.எச். கீதிகா ஜயவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் எம். உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம், மங்களகம பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ். திஸாநாயக்க உட்பட பௌத்த பிக்குகள், முப்படை அதிகாரிகள், பயனாளிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக 2 இலட்ச ரூபாய் நன்கொடையாகவும் 3 இலட்ச ரூபாய் மானிய அடிப்படையிலான கடனாகவும் மொத்தம் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான இவ்வீடுகள், 3 மாத காலத்துக்குள் நிர்மாணிக்கப்பட்டு, மக்களிடம் கிராமம் கையளிக்கப்படுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .