Editorial / 2018 மார்ச் 07 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, நடராஜன் ஹரன், கே.எல்.ரி.யுதாஜித்
மாவட்டத்தில் நிலவும் காணிகள் தொடர்பான பிணக்குகள், பிரச்சினைகளை ஆராய்ந்து, இணக்கமான முடிவுகளை மேற்கொள்வதற்காக இலக்கம் 21/2003 விசேட மத்தியஸ்த சபைச் சட்டத்தின் கீழ், காணி விசேட மத்தியஸ்த சபை, இம்மாதம் இறுதி வாரத்துக்குள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கடந்த 01ஆம், 02ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரபல சட்டத்தரணியும், சட்ட ஆலோசகருமான எம்.திருநாவுக்கரசு தலைமையில் நீதியமைச்சும், மத்தியஸ்த சபை ஆணைக்குழுவும் இணைந்து, விசேட மத்தியஸ்த திறமைகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய மீளுட்டல் பயிற்சி நெறியை மேற்கொண்டுள்ளது.
இக்காணி மத்தியஸ்த சபையில் அடாத்து குடியேறல், இரண்டாம் நிலைக் கைக்கொள்ளல் அல்லது உடமை கொள்ளல், மோசடியான அல்லது சட்டமுறனான காணிக் கைமாறல் (அறுதி விற்பனை, உடன்படிக்கைகள்), காணியினது கூட்டுச் சொந்தம் காரணமாக எழும் பிரச்சினைகள், பரம்பரைச் சொத்துகள் அல்லது பின்னுரித்து தொடர்பான பிரச்சினைகள், பெண்கள், சிறுவர்கள் ஏனைய நலிவுற்றவர்கள் சார்ந்த காணி உரிமைகள், வாடகை உரிமைப் பிரச்சினைகள், காணிக்குள் பிரவேசித்தல் மற்றும் பாதை உரிமை தொடர்பான முரண்பாடுகள், ஆவணங்கள் மற்றும் காணிப் பதிவுகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மத்தியஸ்தம் செய்து வைக்கப்படும்.
குறிப்பாக எவ்விதமான காணிப் பிணக்குகளையும் இங்கு ஆற்றுப்படுத்த முடியும்.
மேலும் நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் காணி விடயங்கள் தொடர்பாக செயற்படும் அரச நிறுவனங்கள் போன்றனவும் காணிப்பிணக்குகளையும் இங்கு ஆற்றுப்படுத்த முடியும்.
காணிப்பிணக்கு பற்றிய விவரம், காணியின் முகவரி மற்றும் இடவமைவு, தரப்பினர்களது பெயர் முகவரி மற்றும் தொடர்புகொள்ளும் தகவல்கள் போன்ற விவரங்களுடன் பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.
அத்துடன், காணி விசேட மத்தியஸ்த சபையின் தலைவர் கதிர்காமத்தம்பி குருநாதன் இல. 40/பி, அனுமார் வீதி மேற்கு, நொச்சிமுனை, மட்டக்களப்பு எனும் முகவரியிலும் முன்வைக்க முடியும்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago