2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் சுதந்திர தின நிகழ்வு

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. விஜயரெத்தினம்

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு, திங்கட்கிழமை (4) காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது பாரம்பரிய கலாச்சார நிகழ்வுடன் அதிதிகளை வரவேற்றல், தேசிய கொடியேற்றல்,பொலிஸ் மரியாதை அணிவகுப்பு, தலைமையுரை, அதிதிகள் உரை, மாவட்ட செயலகத்தில் சிரமதானம்,பூசை வழிபாடுகள் என்பன இடம்பெறவுள்தாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் சுதந்திரதின நிகழ்வுகள் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில், பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .